வழி தவறிய ஆடு.... (தமிழ் கவிதை)

 மந்தையில்   ஓர்ஆடு    நான் 
    மேய்ப்பவர்   இறைவன்  தாம் 
சிந்தையாய்   கண்ணும் கருத்துமாய் 
    சீரியவழி    அவர்   நடத்திட்டார் 

பச்சைப்    புல்வெளி    தனிலே 
    பசியை   எனக்கு   ஆற்றிட்டார் 
மூச்சை   இட்டு   இளைப்பாற 
    மேய்ச்சல்   நிலம்  மேய்த்திட்டார் 

தாகம்   எனக்கு   தீர்த்திடவே 
      தண்ணீர்   அருவி  அழைத்திட்டார் 
அகம்    என்னில்   குளிர்வுறவே
      ஆறுதல்  எனக்குத்  தந்திட்டார்

அச்சம்சூழ்    இருண்ட   பள்ளத்தாக்கில் 
     அழைத்து   எம்மை  சென்றிட்டார்  
அச்சம்   கொள்ளோம்  அவரிருக்க 
     அவரின்   கோல்கம்பு   துணையிருக்க
 
நேர்வழி   எம்மை   நடத்தும்போது 
     நோக்கிட்டேன்   பிறிதொரு   வழியை 
ஆர்வத்தில்   ஓடுனேன்  ஆங்கே
     ஆசைகள்  தீர்க்கும்  வழியென 

ஐயகோ!  தவறிநான்   வந்திட்டேன் 
    ஐயமும்   அச்சமும்  சூழகண்டேன் 
தீயஓநாய்   கூட்டம்    என்னைத் 
    துரத்தி    வேட்டையாட  வந்தனவே.

மெய்நடுங்கி  மனம்    ஒடுங்கி  
     மேய்ப்பனை   நோக்கி   கதறினேன் 
மேய்ப்பன்   எந்தன்   குரல்கேட்டார் 
     மேய்ப்பன் குரலை நான்கேட்டேன் 

நம்பிக்கை   என்னுள்   பிறந்தது 
    நாடித்தேடி  அவரிடம்  ஓடினேன் 
தேம்பி  தேம்பி  அழுகையிலே
     தேறுதல்   எனக்குத்  தந்திட்டார் 

அன்பில்   என்னை   அரவணைத்தார் 
    ஆதரவாய்   தோளில்  சுமந்தார் 
இன்பமாய்    அவர்  அருகிலிருப்பேன் 
     இனியென்றும்   விலகிடேன்  அவரை 

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))